Sunday, November 29, 2015

ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா

நெற்றியிலே திருநீறும்
பக்தியிலே கண்ணீரும்
நாங்களும் தருவோமப்பா - ஐயப்பா
நாங்களும் தருவோமப்பா
பொன்னான தெய்வமே
என்னாளும் எங்களை
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
ஓயாமல் ஒழியாமல்
உன் புகழ் பாடிட
வரங்களும் தருவாயப்பா - ஐயப்பா
வரங்களும் தருவாயப்பா
வில்லாளி வீரனே
வீர மணிகண்டனே
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
கார்த்திகை திங்கள் முதல்
கற்பூரம் ஏற்றியே
சரணங்கள் சொல்வோமப்பா - ஐயப்பா
சரணங்கள் சொல்வோமப்பா
குளத்தூரில் ஐயனே
குழந்தை மணிகண்டனே
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
குழந்தை உன் நெற்றியிலே
குங்குமப் பொட்டிட்டு
கொஞ்சிடத் தோணுதப்பா - ஐயப்பா
கொஞ்சிடத் தோணுதப்பா
எரிமேலி வாசனே
எங்கள் குலதெய்வமே
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
சாஸ்தா உன் நெஞ்சினிலே
சந்தணத்தைப் பூசி
சாய்ந்திடத் தோணுதப்பா - ஐயப்பா
சாய்ந்திடத் தோணுதப்பா
அச்சன்கோவில் அரசனே
ஆரியங்காவு அய்யனே
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
கண்மணி உன் கன்னத்திலே
திருஷ்டி பொட்டு தான் வைத்து
கண் குளிர காண்பேனப்பா - ஐயப்பா
கண் குளிர காண்பேனப்பா
பம்பையின் பாலனே
பந்தளத்து ராஜனே
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
எத்தனை பிறவிகள்
இப்புவியில் எடுத்தாலும்
மறவா வரம் தருவாயப்பா - ஐயப்பா
மறவா வரம் தருவாயப்பா
காந்தமலை வாசனே
கலியுக வரதனே
காத்திட வருவாயப்பா - ஐயப்பா
காத்திட வருவாயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா சரணம் ஐயப்பா

No comments:

Post a Comment