அரி ஓம் நமோ பச்சை நிறமும் பவளவாயும் அறையில் கட்டிய
சந்திரகாவிப்பட்டும் ஒட்டியாணமும் மார்பிலிட்ட நூல்மாலையும் களுத்திலிட்ட
ஆபரணமும் காதிலிட்ட கவசகுண்டலமும் கிரீடமும் திகளேந்திய இளமாது முல்லையும்
நவரத்தினமாகிய பல்லும் மூக்குத்தியும் சிலம்பும் சிங்கக்கொடியும் மானொருகை
மளுவொருகை சங்கொரு கை சக்கரம் ஒருகை அன்பர்க்குச் சொர்ணமளித்திடு கரமும்
மஞ்சாதென்னும் மத்தியகரமும் துலங்கிய விபூதியுமாய் எழுந்தருளியிருப்பாள்
என்னம்மை மோகம்புரி மாங்கிஷமாது நீயே சுவாகா ஓம் அங்ஙறிங்ங மத்தே சத்தே
மரிசெய் மாசத்திரி நீலி நீலி நீலகண்டி மோகாம்புரி தூளி தூளி தூளி உச்சாடு
உச்சாடு பூதப்படையும் போகாவியாதியும் பிச்சீ பித்தத்தீயும் பிடி சன்னியும்
சனித்தசன்னியும் சன்னிவகை பதினெட்டும் விட்ட பசாசும் வைத்த சூனியமும் ஆலகால
மரத்தில் ஆணி அறைந்ததும் மண் துறையில் புதைத்த பலபல சூனியமுள்ளதும்
வயிற்றுக் கழிச்சலும் மலஞ்சலம் மறிபட்டதும் எட்டுக் குரளியும் கூடிய
நஞ்சும் வேதாளபூதமும் மூன்றுகப் பிளவை முன்கண்ட மாலைகாலடியரிப்பு அரையினில்
புத்துடன் பத்தெளுர் துடையினில் படுவன் தொண்ணூற்றாறும் ஐநூற்றைம்பது
அழந்திடு வியாதி தொண்ணூற்றாறு தோன்றிய வியாதியும் நாநூற்றைம்பது
நானாவலியும் கன்னக்கிரந்தியும் களலை கண்டமாலைகளுமின்றி எழுந்திடு மீளா
வியாதியும் இருமல் ரோகம் எண்பத்துமூன்றும் தலைவலி சூலை தண்டுப்பிளவையும்
அண்டவாதம் அடங்காக் கழிச்சல் பொத்திக்கரப்பான் புத்துடன் கண்வலி காயாம்பூக்
காய்ச்சல் கண்ணில் சிகப்பூ விழிகண் குறுடூவிழி மினுமினுங்கல் குவளைச்
சிலந்திகுத்து விப்புருதீ மோகாம்புரி நாகப்படலம் நத்தைப்படுவன் புருவவாதம்
புகைஎழு புண்ணும் சுருக்குடன் இளைப்பு முடக்கியவாதம் முப்பத்துமூன்று
எழுந்திடு வியாதி எழுபத்திரென்று தோன்றியவியாதி தொண்ணூற்றாறு பிறமுனை கட்டு
கட்டு கரிமுகனே வெட்டு வெட்டு வேலாயுத்தின் ஆணை சுட்டெரி சுட்டெரி ஏ நெடா
கெடுவா நா நெடா மோகாம்புரி தீண்டாதவரைத் தீண்டுவதேதடா சிவனடியாரை
அணுகுவதேதடா திருநம்பிமாயா ஐய்யன் கோவில் அதிரப்பிடுங்கி மற்றுள்ள கோவில்
மண்டு தீயிட்டு சாமுண்டி கோவில் தனலாயெரித்து உள்ளுறங்கள் பேசிவந்தேந்
வாளாலறுத்திடு விழியாலெரித்திடு சிந்தீயிற் தீயால் சினக்கும் மோகாம்புரி
அம்மை கரத்தாலறுத்த மோகாம்புரியம்மை எரிதணல் மளுவால் எரிக்கும் மோகாம்புரி
எரி எரி திரிபுரமெரிய அகோர உருத்திராய நம ஓடம்மா ஓடு.
பேய், பசாசு பிடித்தவர்களுக்கும் சன்னி, தோஷங்களுக்கும் இம்மந்திரம் சொல்லி வேப்பிலை அடிக்க நீங்கும்.
பேய், பசாசு பிடித்தவர்களுக்கும் சன்னி, தோஷங்களுக்கும் இம்மந்திரம் சொல்லி வேப்பிலை அடிக்க நீங்கும்.
No comments:
Post a Comment